.

.
  • பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜய ஏற்பாடுகள் ஜோனிடம்

  • நீதியரசர் ஸ்ரீபவன் முன்னிலையில் மைத்திரி பதவியேற்பார்

  • ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார்

  • நீங்கள் விண்டோஸ் 8 பயன்படுத்துபவரா? விண்டோஸ்-9 இலவசம்

09 January 2015

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய்


உலக மக்களிடையே நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு காரணம் உணவு உண்ணும் முறையே. நகர வாழ்க்கையின் தாக்கத்தினாலும் போதிய உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுபடுத்த பாகற்காய் பெரிதும் உதவுகிறது.
பாகற்காய் இலை, காய், விதைகளில் தாவர இன்சுலின் என்ற புரதச் சத்து உள்ளது. இது இன்சலின் போல் செயல்படுவதாகவும், இன்சுலின் சார்ந்த மற்றும் இன்சுலின் சாராத இருவகை நோயாளிகளுக்கும் பயன்படுவதாகவும், கணையத்தில் செயல்பட்டு பீட்டா செல்களை உயிர்ப்பிப்பதாகவும் சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
பாகற்காயானது ரத்தத்தில் சர்க்கரை அளவை 50% வரை குறைக்கிறது. இது சர்க்கரை விழித்திரை நோயைத் தடுக்கிறது. நரம்புகளின் பாதிப்பையும் சரி செய்கிறது. சர்க்கரையிலிருந்து கொழுப்பு உண்டாவதை அதிகரிப்பதாகவும், கொழுப்பில் இருந்து சர்க்கரை உருவாகி ரத்தத்தில் கலப்பதைக் குறைக்கிறது.

பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜய ஏற்பாடுகள் ஜோனிடம்

பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜயம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க முன்னெடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.  ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களில் ஆலோசனைக்கமையவே ஜோன் அமரதுங்கவுக்கு இந்த பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.  எதிர்வரும் வியாழக்கிழமை (13) பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது
 
பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜயம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க முன்னெடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களில் ஆலோசனைக்கமையவே ஜோன் அமரதுங்கவுக்கு இந்த பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (13) பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/137345#sthash.J2lpDjt9.dpuf
பாப்பரசர் பிரான்ஸிசின் இலங்கை விஜயம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க முன்னெடுக்கவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.வின் தலைவர் ரணில் விக்கிரமசிங்களில் ஆலோசனைக்கமையவே ஜோன் அமரதுங்கவுக்கு இந்த பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வியாழக்கிழமை (13) பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.tamilmirror.lk/137345#sthash.J2lpDjt9.dpuf

மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் எனக்கு இல்லை -மைத்திரி

நாட்டின் அன்பான மக்களின் பொறுப்புகள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும், அதனை மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றுவேன் எனவும் ஜனாதிபதியாக இன்று பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மீண்டுமொருமுறை ஜனாதிபதியாகும் எண்ணம் தனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இன்று மாலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வைத்து இலங்கையின் ஆறாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் உரையாற்றிய போதே மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

என்னை வேட்பாளராகத் தெரிவு செய்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஹெல உறுமய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக் குறிப்பிட்ட அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இந்த தருணத்தில் நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார்.

இதேவேளை தேர்தல் காலத்தில் பிரச்சார மேடைக்கு தீவைத்தமை, ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற விடயங்கள் தொடர்பிலும் கவலையடைவதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

வெற்றி கொண்டாட்டத்தில் திருகோணமலை மக்கள் ..


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றியினைக் கொண்டாடி மகிழும் திருகோணமலை மக்கள்











திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தால் வெற்றி விழா

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை குறித்து இன்று வெள்ளிக்கிழமை 09.01.2015 திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தால் வெற்றி விழா நடாத்தப்பட்டது.







ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவியேற்றுக் கொண்டார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பதவியேற்றுக் கொண்டார். 
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையிலேயே இன்று மாலை 06.30 மணியளவில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.